தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







டெலிஷாப்பிங் செய்யலாமா?!

எப்போ டிவி பொட்டியை திறந்தாலும் ஏதாவது ஒரு சேனலில் ஒரு வெள்ளைக்கார தாத்தாவும் பாட்டியும் தமிழில் பேசி நம்ம தலையில் மிளகாய் அரைக்க ட்ரை பண்ணிக்கிட்டு இருப்பாங்க.

வெள்ளைக்கார பாட்டி: இவர்கிட்ட இருப்பது சாதாரண கரண்டி. என்னிடம் இருப்பதோ சூப்பர் பவர் கரண்டி!

சாதாரண கரண்டியால் சமைப்பவர்: சே இந்த கரண்டியால் என்னால் எதுவுமே கிண்ட முடியலை. அல்வா கிண்டினா அகப்பையில் ஒட்டாம சட்டியிலேயே ஒட்டிக்குது. சே வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!

வெ.கா.பா: ஆஹா இந்த கரண்டியால் கிண்டுவது எவ்வளவு சுலபம். சும்மா தொட்டாலே போதும் தானே கிளறும். எவ்வளவு சுலபம்!

சா.க.ச: ஆஹ்! என்ன ஆச்சரியம். எவ்வளவு சுலபமா இருக்கு

வெ.கா.பா : ஆமா சுலபம்தான். பழைய கரண்டியெல்லாம் தூக்கிப் போட்டுடுங்க. சூப்பர் பவர் கரண்டியால் அல்வா கிண்டினால் அல்வா சட்டியில் ஒட்டாது. உங்கள் வாயிலும் பையிலும் மட்டுமே ஒட்டும்.

பின்னணியில் ஒரு பெண் குரல்: இதோட விலை வெறும் 9999 ரூபாய் மட்டுமே! இந்த எண்ணில் முதலில் தொடர்பு கொள்பவர்க்கு சூப்பர் பவர் கரண்டியோடு அதை பூட்டி வைப்பதற்கான பெட்டியும் இலவசம். இந்த இரண்டு பொருட்களின் விலை வெறும் 9999 ருபாய் மட்டுமே!

(பின்னே இவ்வளவு விலை கொடுத்து வாங்கி அதை உபயோகிக்க முடியும்னு நினைக்கறீங்க! அதனாலதான் பத்திரமா பூட்டி வைக்க பெட்டியும் தர்றாங்க)

இதையே அந்த அரை மணிநேரமும் திரும்ப திரும்ப சொல்லி நம்மளை கொல்லுவானுங்க இந்த வெள்ளைக்காரனுங்க!

இதைப்பார்த்த நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா?! நாங்களும் எங்க ஸ்டைலில் களத்துல குதிப்போம்ல அப்படீன்னு குதிச்சுட்டாங்க. ஆனா அவனுங்களை மாதிரி கரண்டியும் ஜூசரும் வித்தா எங்க மரியாதை என்னாவறது. நாங்க வெறும் கயிறையே மந்திரக்கயிறுன்னு வித்துட மாட்டோமான்னு ரவுசை ஆரம்பிச்சுட்டாங்க.

பெண்: என் கணவர் நல்லா கள்ளச்சாராய வியாபாரம் செய்துக்கிட்டு இருந்தார். திடீர்னு போலீஸ் ரெய்டு அது இதுன்னு வியாபாரம் நொடிச்சு போயிடுச்சு. அப்போதான் என் ஃப்ரெண்ட் இந்த கயிறு பத்தி சொன்னா. வாங்கி சாராய பானையை சுற்றி கட்டியதும் ....

என்ன ஆச்சரியம் இப்பல்லாம் போலீஸ் ரெய்ட் வருவதே இல்லை. தண்ணியை கொதிக்க வச்சாலும் அது சாராயமா மாறிடுது. வியாபாரமும் கொடிகட்டி பறக்குது. எல்லாவற்றிற்கும் மந்திர கயிறுதான் காரணம்

பின்னணி குரல்: இந்த மந்திரக்கயிறு இமயமலையில் உள்ள பனியை கயிறாக திரித்து உருவாக்கப்பட்டதால் அற்புத சக்தி வாய்ந்தது. இதை உங்கள் வீட்டில் வைத்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும். மண்சட்டி பொன்சட்டியாக மாறிவிடும். இந்த அற்புத மந்திரக்கயிறின் விலை வெறும் 4999ரூபாய் மட்டுமே.

உண்மையிலேயே மக்கள் இதெல்லாம் வாங்கறாங்களா?! எல்லா சேனலிலும் அரைமணிநேரம் ஓடுகிறது. இதற்கெல்லாம் பணம் கிடைக்கும் அளவு வியாபாரம் இருந்தால்தானே இது சாத்தியம்.

இதையெல்லாம் இன்னமுமா மக்கள் நம்பறாங்க! இவனுங்க நம்மளை லூசுன்னு நினைக்கறானுங்களா இல்லை அவனுங்கதான் மெய்யாலுமே லூசா?! சகோஸ் நீங்களே சொல்லுங்களேன்.

8 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

அய்யோ கவிசிவா ,இந்தியா வாங்க இப்ப கல்,கலக்கல்,குத்தாட்டம்- ம்னு ஆள் பிடிக்கிற ஷாப்பிங் களை கட்டுது,நம்ம கண்ணை கட்டாமல் இருந்தால் சரி.

kavisiva சொன்னது…

//அய்யோ கவிசிவா ,இந்தியா வாங்க இப்ப கல்,கலக்கல்,குத்தாட்டம்- ம்னு ஆள் பிடிக்கிற ஷாப்பிங் களை கட்டுது,நம்ம கண்ணை கட்டாமல் இருந்தால் சரி.//

அய்யோ இப்போ இது வேறயா?! எ.கொ.ச.இ.!

Menaga Sathia சொன்னது…

இந்த டெலிஷாப்பிங் தொல்லை தாங்கமுடியல.அதைவேற போட்டு நம்மள கொல்றானுங்க.இதெல்லாம் பார்த்துட்டு எனக்கும் வேணும்னு என்னை கேட்காதேன்னு என் வீட்டுக்காரர்கிட்டயிருந்து அட்வைஸ் வேற...என்ன சொல்றது???????

Menaga Sathia சொன்னது…

கவி இந்தியாவுக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்க.அதுக்குமுன் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டுக்குங்க.நல்லது..ஏன்னா நானும் 2மாதத்திற்க்கு முன் இந்தியா போகும்போது அப்படி தான் செய்தேன்...

kavisiva சொன்னது…

//இந்த டெலிஷாப்பிங் தொல்லை தாங்கமுடியல.அதைவேற போட்டு நம்மள கொல்றானுங்க.இதெல்லாம் பார்த்துட்டு எனக்கும் வேணும்னு என்னை கேட்காதேன்னு என் வீட்டுக்காரர்கிட்டயிருந்து அட்வைஸ் வேற...என்ன சொல்றது???????//

ஹி ஹி டெலிஷாப்பிங்கில் சாமான் வாங்கி நொந்த கதையும் இருக்கிறது :-( அதை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்(ல்)கிறேன் :-)

kavisiva சொன்னது…

//கவி இந்தியாவுக்கு நல்லபடியாக போய்ட்டு வாங்க.அதுக்குமுன் டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டுக்குங்க.நல்லது..ஏன்னா நானும் 2மாதத்திற்க்கு முன் இந்தியா போகும்போது அப்படி தான் செய்தேன்...//

நிச்சயமா செய்கிறேன் மேனகா.

suvaiyaana suvai சொன்னது…

interesting கவி நான் டெலி ஷாப்பில் வாங்கியது இல்லை ஆனால் இன்டெரெஸ்ட்டா பார்ப்பேன் நைட் தூக்கம் வராத போது இது தான் டைம் பாஸ்:)

kavisiva சொன்னது…

சுஸ்ரீ டெலிஷாப் விரும்பி பார்பீங்களா?! பார்ப்பதோட நிறுத்திடுங்க. வாங்காதீங்க. டெலிஷாப்பில் கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் :-)

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)