தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்




"டெலிஷாப்பிங் செய்யலாமா" பதிவு போட காரணமே பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு டெலிஷாப்பிங் விளம்பரத்தில் மயங்கி ஒரு பொருளை வாங்கி நொந்து போனதால்தான் :-(

அப்போது நான் காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன். டெலிஷாப்பிங் விளம்பரத்தில் ஒரு வெஜிடபிள் கட்டருக்கான விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப்பார்த்ததும் அது காய் வெட்டும் அழகில் மயங்கி விட்டேன். அந்த வயதில் வரவேண்டிய காதல் மயக்கத்திற்கு விழாமல் அல்ப விளம்பரத்தில் விழுந்துட்டேன் :-(

என் அப்பாவிடம் அடம் பிடித்து எனக்கு அது வேனும்னு சொல்லி அடம்பிடித்து டெலிஷாப்பிங் நிறுவனத்திற்கு போன் செய்து விட்டேன். போன் செய்த அரைமணி நேரத்தில் பொருளும் வீட்டுக்கு வந்து விட்டது. விலை 600ரூபாய்.

அன்றைய சமையல் நாந்தான் செய்வேன்னு சொல்லி அம்மாவுக்கு அன்று கிச்சனில் இருந்து ரெஸ்ட் கொடுத்து விட்டேன். காஷ்மீரி புலாவ் செய்யப்போகிறேன் என்று கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர் வெங்காயம் எல்லாம் தயாராக எடுத்தாச்சு

அடுத்து புது வெஜிடபிள் கட்டரில் காய் வெட்டும் படலம். வெஜிடபிள் கட்டரை மேடையில் ஃபிக்ஸ் செய்ய நினைச்சு அதுக்குள்ள நாபை திருகினால் கட்டர் வெட்கத்தில் நழுவி நழுவி ஓடியது. இது என்னடா கவிக்கு வந்த சோதனைன்னு மேனுவலை எடுத்து படிச்சா கட்டர் வழவழப்பான தரையில் மட்டும்தான் ஒட்டுவாங்களாம். மற்ற தரைன்னா அதுக்கு பிடிக்கவே பிடிக்காதாம்.

சரின்னு ஒரு மைக்கா ஒட்டிய ஸ்டூலில் ஃபிக்ஸ் செய்தாச்சு. இப்போ கட்டரின் மேல் பாகத்தை கழற்றணும். அதைப்பிடித்து திருகினா அது வருவேனான்னு அடம் பிடிச்சுது. ஒருவழியா அந்த ரகசியத்தையும் கண்டுபிடிச்சு (பொண்ணுங்க மனசுல மட்டும்தான் ரகசியம் இருக்கணுமா எனக்கும் இருக்கும்ல அப்படீன்னு அது என்னைப் பார்த்து சிரிச்ச மாதிரியே இருந்துச்சு) மேல்பாகத்தை கழற்றியாச்சு.

அடுத்து ப்ளேட் ஃபிக்ஸ் செய்யணும். அதுக்கும் அந்த பாழாப்போன கட்டர் ஒரு ரகசியம் வச்சிருந்தது. குறிப்பிட்ட ஆங்கிளில் வச்சா மட்டும்தான் பொருந்துவேன்னு அடம்புடிச்சுது. அதையும் கண்டு புடிச்சு போட்டு திரும்பவும் மேல்பாகத்தைக் கொண்டு மூடி...

கேரட்டை வச்சு இடது கையால் புடிச்சுக்கிட்டு வலது கையால் ஹேண்டிலை பிடிச்சு
சுழற்றினா... ஹேண்டிலை சுற்ற காலையில் இன்னும் ரெண்டு இட்லி கூடுதலா சாப்பிட்டிருக்கணும். என் பலம் முழுவதும் கொட்டி ஹெண்டிலைச் சுற்றி சுற்றி கேரட்டை வெட்டி முடித்தேன்.

நான் சமையல் செய்ய ஆரம்பித்து ஏறக்குறைய 45நிமிடம் ஆயிடுச்சு. என் அண்ணன் இவ இந்த லட்சணத்துல காய் வெட்டுனா நமக்கு லன்ச்சுக்கு பதில் டின்னர்தான் செஞ்சு போடுவான்னு கிண்டல் பண்ணிக்கிட்டு இருந்தார். எங்க அப்பா கவி கஷ்டமா இருக்குதானு கேட்டார். ஆமான்னு சொல்ல மனசு இடம் கொடுக்கலை. நாம் சொல்லி அப்பா வாங்கிட்டார். சரியில்லேன்னு சொன்னா நமக்கு கேவலமாச்சே! இல்லப்பா புதுசுல்ல அதான் இப்படி இருக்கு பழகினா சரியாயிடும்னு சொல்லி சமாளிச்சேன்.

ஒருவழியா எல்லாத்தையும் அதிலேயே வெட்டி அருமையா காஷ்மீரி புலாவும் செய்து விட்டேன். அடுத்து கட்டரை க்ளீன்செய்யும் வேலை...

ஒவ்வொரு பார்ட்டையும் கழற்றி கழுவி காயவைத்து மீண்டும் அதை எடுத்து வைத்து...

அன்று மூட்டை கட்டி ஸ்டோர் ரூமில் வைத்ததுதான்... இன்னிக்கும் எனக்காக அங்கேயே காத்துகிட்டு இருக்கு. எங்க அப்பா அதைப் பார்த்து இத எடுத்துக்கோயேண்டான்னு சொல்லும் போதெல்லாம்...இருக்கட்டும்பா நான் இந்தியாவில் வந்து செட்டிலாகும் போது எடுத்துக்கறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இன்னிக்கு வரை நான் ஏமாந்துட்டேன்பான்னு அப்பாகிட்ட சொல்லலை :-). ஆனா அது மட்டும் என்னைப் பார்க்கும் போதெல்லாம் நல்லா ஏமாந்தியான்னு கேட்கிற மாதிரியே இருக்கு :-(

ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. அது எப்படி விளம்பரத்தில் நடிக்கறவங்க மட்டும் இதில் ரொம்ப ஈசியா வெட்டுராங்க?

10 கருத்துகள்:

Menaga Sathia சொன்னது…

டெம்ப்ளேட் நலலயிருக்கு கவி!! இதுல பொருள் வேற வாங்கினீங்களா?அடக் கொடுமையே...

suvaiyaana suvai சொன்னது…

Interesting comedy

Asiya Omar சொன்னது…

செய்திக்கு நல்ல பொருத்தமான தலைப்பு.கவி.நல்ல அறிவுறுத்தல்,யாரும் இனி டெலி ஷாப்பிங்ல பொருள் வாங்குவாங்க ?

Prathap Kumar S. சொன்னது…

//ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. அது எப்படி விளம்பரத்தில் நடிக்கறவங்க மட்டும் இதில் ரொம்ப ஈசியா வெட்டுராங்க?//

ஹஹஹ... ஏங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க? டெலிஷாப்பிங்க எல்லாம் வெறும் ஏமாத்துற வேலைதான். இனிமே ஏமாறாதீங்க...

என் பதிவுல உங்க கமெண்டை பார்த்தேன். நீங்களும் நாகர்கோவிலா? மகிழ்ச்சி. இப்ப எங்க இருக்கீங்க? இவ்ளோ நல்லா காமெடியா எழுதறீங்க ஆனா கடைல யாரையுமே கோணோம் :)

kavisiva சொன்னது…

//டெம்ப்ளேட் நலலயிருக்கு கவி!! இதுல பொருள் வேற வாங்கினீங்களா?அடக் கொடுமையே...//

நன்றி மேனகா! நான் ஏமாறலை காசு கொடுத்தது அப்பா அதனால ஹி..ஹி..

kavisiva சொன்னது…

//Interesting comedy//

நன்றி சுஸ்ரீ

kavisiva சொன்னது…

//செய்திக்கு நல்ல பொருத்தமான தலைப்பு.கவி.நல்ல அறிவுறுத்தல்,யாரும் இனி டெலி ஷாப்பிங்ல பொருள் வாங்குவாங்க ?//

நன்றி ஆசியா!

எல்லாரும் வெவரமானவங்க அதனால யாரும் வாங்க மாட்டாங்க. "உங்களுக்கு வெவரம் பத்தலையான்னு" சின்னப்புள்ளத்தனமா கேட்கப்படாது..அழுதுடுவேன்

kavisiva சொன்னது…

//ஹஹஹ... ஏங்க இவ்ளோ அப்பாவியா இருக்கீங்க? டெலிஷாப்பிங்க எல்லாம் வெறும் ஏமாத்துற வேலைதான். இனிமே ஏமாறாதீங்க...

என் பதிவுல உங்க கமெண்டை பார்த்தேன். நீங்களும் நாகர்கோவிலா? மகிழ்ச்சி. இப்ப எங்க இருக்கீங்க? இவ்ளோ நல்லா காமெடியா எழுதறீங்க ஆனா கடைல யாரையுமே கோணோம் :)//

வருகைக்கு நன்றி பிரதாப்! இனிமே ஏமாற மாட்டேன் :-).

இப்போ இந்தோனேஷியாவின் ஒரு குட்டித் தீவில் இருக்கிறேன்.
நம்ம கடைக்கு டெலிஷாப்பிங் விளம்பரம் மாதிரி ஏதாச்சும் பண்ணினா கூட்டம் வருதான்னு பார்க்கணும். என்ன பண்ணினா கூட்டம் வரும்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் :-(

Jaleela Kamal சொன்னது…

//ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு புரியவே இல்லை. அது எப்படி விளம்பரத்தில் நடிக்கறவங்க மட்டும் இதில் ரொம்ப ஈசியா வெட்டுராங்க?//


அப்ப தானே ப்பா கட்டர் ஈசியா விலை போகும்.

kavisiva சொன்னது…

//அப்ப தானே ப்பா கட்டர் ஈசியா விலை போகும்.//

அதுவும் சரிதான். என்னை மாதிரி ஆட்களை சரியாத்தான் குறி வைக்கறாங்கப்பா!

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)