தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







இந்திய ஏர்போர்ட்டுகளில் இமிக்ரேஷன் லொள்ளு


சில தினங்களுக்கு முன் "பிரியமுடன் பிரபு" வலைப்பூவில் வந்த ஒரு பதிவு... நம் இந்திய குடிநுழைவு அதிகாரிகள் (இமிக்ரேஷன் அதிகாரி) படுத்திய பாட்டைப்பற்றி நொந்து போய் எழுதியிருந்தார். அதேபோல் எனக்கும் ஒரு அனுபவம் முன்பு ஏற்பட்டது.

இந்தோனேஷியாவிலிருந்து விடுமுறைக்காக ஊர் சென்று விட்டு மீண்டும் சிங்கப்பூர் வழியாக இந்தோனேஷியா திரும்பும் போது.... திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் இமிக்ரேஷன் அதிகாரி என்னை அனுமதிக்க மறுத்தார். அதுக்கு அவர் சொன்ன காரணம் என்னிடம் ரிட்டர்ன் டிக்கெட் இல்லை என்பதுதான். நான் இந்தியாவுக்கு விடுமுறை வந்துட்டு மீண்டும் திரும்பி போரேன் என்கிட்ட எப்படி டிக்கட் இருக்கும்னு கேட்டா அதெல்லாம் எனக்கு தெரியாது ரிட்டன் டிக்கெட் இல்லை அனுமதிக்க முடியாதுன்னுட்டார். என்னிடம் இருக்கும் விசாக்களை காண்பித்த போதும் எதையும் கேட்கும் மூடில் அவர் இல்லை.

திருப்பி திருப்பி அவர் சொன்னது நீங்க சிங்கப்பூர் போரீங்க. சிங்கப்பூருக்கு உங்களுக்கு விசிட் விசா மட்டும்தான் இருக்கு. அதனால ரிட்டர்ன் டிக்கெட் இல்லாம அனுமதிக்க முடியாதுன்னு சொன்னதையே திரும்பி திரும்பி சொல்லிக்கிட்டு இருந்தார். என்னிடம் சிங்கப்பூருக்கான multiple entry business visit visa வும் இந்தோனேஷியாவுக்கான stay permit ம் இருந்தது.

அவரிடம் இரண்டையும் காட்டி சிங்கப்பூர் வழியாகத்தான் நான் இருக்கும் இந்தோனேஷிய தீவுக்கு போக முடியும். எனக்கு சிங்கப்பூருக்கு எண்ட்ரி விசாவும் இருக்கு இந்தோனேசியாவுக்கு ஸ்டே பெர்மிட்டும் இருக்கு அப்புறமும் என்ன பிரச்சினைன்னு கேட்டா உடனே சிங்கப்பூர் டூ இந்தோனேசியா கனெக்டிங் ஃப்ளைட் டிக்கட்ட காமிங்கன்னாரு.

அவரிடம் சிங்கப்பூரிலிருந்து ஃப்ளைட் இல்ல ஃபெரியில் போகணும்னு சொல்லி ஃபெரி டிக்கெட்டையும் காமிச்சேன். (நல்ல வேளையாக ஃபெரி டிக்கெட் வைத்திருந்தேன். சாதாரணமாக இங்கு ஃபெரி ஏறும் முன் நாம் பஸ் டிக்கட் எடுப்பது போல் எடுப்பதுதான் வழக்கம்)

டிக்கெட்டில் ஃப்ளைட் டிக்கெட் போல் தேதி நேரம் எல்லாம் குறிப்பிடப் பட்டிருக்காது. ஃபெரி டெர்மினலில் போய் புக் செய்து கொள்ளலாம். அல்லது இணையம் மூலம் புக் செய்யலாம் அதுவும் 3நாட்களுக்கு முன்புதான் செய்ய முடியும். டிக்கெட்டை வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார்.

மீண்டும் சந்தேகம்... டிக்கெட்டில் தேதி ஒண்ணும் இல்லை டிக்கட் கன்ஃபார்ம் ஆகும்னு நான் எப்படி நம்பறதுன்னார். அங்கு போய்தான் புக் செய்ய முடியும். அரைமணி நேரத்துக்கு ஒரு ஃபெரி இருப்பதால் முன்கூட்டியே புக் செய்ய அவசியம் இல்லைன்னு சொன்னேன். அதெல்லாம் எனக்கு தெரியாது கன்ஃபர்ம் டிக்கட் இல்லாம அனுப்ப முடியாதுன்னு அடம் புடிச்சார். அதுவரை பொறுமையாக விளக்கிக் கொண்டிருந்த எனக்கு கோபம் வந்துடுச்சு.

பாஸ்போர்ட்டை வாங்கி பழைய ஸ்டாம்பிங்குகளையெல்லாம் அவரிடம் காண்பித்து ஒருமாசத்துல நாலு தடவையாவது சிங்கப்பூருக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில பயணம் செய்துக்கிட்டு இருக்கேன். அங்கயெல்லாம் எந்த பிரச்சினையும் இல்ல. இங்க மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை? இத்தனைக்கும் என் பாஸ்போர்ட்டில் ECNR ஸ்டாம்பிங் இருக்கு. பொறியியல் பட்டதாரின்னு இருக்கு. அப்புறமும் ஏன் இமிக்ரேஷன் க்ளியரன்சுக்கு இவ்வளவு பிரச்சினைன்னு கத்த ஆரம்பிச்சதும் இன்னொரு அதிகாரி வந்து தலையிட்டு எல்லாவற்றையும் க்ளியர் செய்து அனுப்பினார்.

இப்போ ஃபெரி டிக்கெட் கையில் இல்லாமல் நான் இந்தியாவுக்கு போவதே இல்லை :-)

இந்தியாவுக்குள் நுழையும் போதும் பிரச்சினைதான். வர்ற ஃபாரினரிடம் வழிந்து எதுவும் பேசாமல் ஸ்டாம்பிங் குத்தி அனுப்பிவிட்டு நம்மிடம் லொட்டு லொசுக்குன்னு ஆயிரம் கேள்வி.

என் மாமனார் இறந்து நாங்கள் எல்லோரும் அழுது துடித்து ஊருக்கு வரும் போது இந்த அதிகாரிகள்படுத்திய பாடு... அழுதழுது முகம் வீங்கின எங்களைப்பார்த்து சகபயணிகள் எங்களை க்யூவில் நிற்க வேண்டாம் என அவர்களே முன் வந்து முதலில் அனுப்பினாங்க. இமிக்ரேஷன் அதிகாரியும் பிரச்சினை செய்யவில்லை. ஆனால இந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள்... இமிக்ரேஷனில் அந்த எம்பார்க்கேஷன் கார்டில் ஸ்டாம்ப் செய்து ஒரு சிறிய ஸ்லிப் தருவார்கள். அதை பதட்டத்தில் பாஸ்போர்ட்டில் ஸ்டாம்பிங் செய்த பக்கத்தில் இருந்து எடுத்து கஸ்டம்ஸ் அதிகாரியிடம் பாஸ்போர்ட்டோடு கொடுத்து விட்டோம். அதற்கு அந்த அதிகாரி ஏதோ நாங்கள் உலக மகா குற்றம் செய்தது போல் கத்தி மீண்டும் ஸ்டாம்பிங் பக்கத்தை தேடி அதில் அந்த ஸ்லிப்பை வைத்து தர கத்தினார். அப்படி வைத்து கொடுத்த போது அந்த பக்கத்தை திறந்து எதையுமே பார்க்காமல் அந்த ஸ்லிப்பை மட்டும் எடுத்துக் கொண்டார். இதைத்தானே நாங்கள் ஸ்லிப்பை மட்டும் எடுத்து கொடுத்தோம். எதற்கு கத்தினார் என்பது புரியாத புதிர். அன்று கேள்வி கேட்கும் மனநிலையில் கூட நாங்கள் இல்லை.

இமிக்ரேஷன் ஆஃபீசர் கஸ்டம்ஸ் ஆஃபிசர்னா பெரிய கொம்பன்னு நினைப்பு. எல்லாத்தையும் முறையா செய்து போறவங்ககிட்டதான் இவனுங்க ஜம்பம் எல்லாம். தீவிரவாதியை மட்டும் கரெக்டா ஃப்ரீயா விட்டுடுவானுங்க!

6 கருத்துகள்:

Asiya Omar சொன்னது…

அய்யோ!கவி நல்ல பகிர்வு.நானும் இந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்லே நிறைய அனுபவித்து இருக்கிறேன்,நெல்லை,நாகர்கோவில்,மதுரைன்னு நமக்கு பக்கமாக ஒரு ஏர்போர்ட் இருக்கக்கூடாதான்னு ஏங்கியதுண்டு,தமிழ் ஆட்களிடம் அங்கு கெடுபிடி வேறு ஜாஸ்தி.

Prathap Kumar S. சொன்னது…

அவனுங்க பண்ற அநியாயம் கொடுமைங்க... அதுவும் திருவனந்தபுரத்துல ரொம்ப ஜாஸ்தி ருல்ஸ் பேசுவானுங்க...

இனிமே நாங்களும் எச்சரிக்கையாத்தான் இருக்குனும் போல...

kavisiva சொன்னது…

//அய்யோ!கவி நல்ல பகிர்வு.நானும் இந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்லே நிறைய அனுபவித்து இருக்கிறேன்,நெல்லை,நாகர்கோவில்,மதுரைன்னு நமக்கு பக்கமாக ஒரு ஏர்போர்ட் இருக்கக்கூடாதான்னு ஏங்கியதுண்டு,தமிழ் ஆட்களிடம் அங்கு கெடுபிடி வேறு ஜாஸ்தி.//

உண்மைதான் ஆசியா நாம மலையாளத்தில் பேசினாலும் பாஸ்போர்ட்டில் தமிழ்நாடுன்னு இருக்கறத பாத்துட்டு லொள்ளு பண்ணுவானுங்க.

kavisiva சொன்னது…

//அவனுங்க பண்ற அநியாயம் கொடுமைங்க... அதுவும் திருவனந்தபுரத்துல ரொம்ப ஜாஸ்தி ருல்ஸ் பேசுவானுங்க...

இனிமே நாங்களும் எச்சரிக்கையாத்தான் இருக்குனும் போல...//

நமக்கும் வேற வழியில்லேங்களே! சென்னை அல்லது திருச்சி வழியா போறதுன்னா ட்ராவல்லயே 2நாள் ஓடிடுமே! அந்த ரெண்டு நாள் அதிகமா சொந்தபந்தங்களோட இருக்கலாமேன்னு மனசு அடிச்சுக்குதே!

Menaga Sathia சொன்னது…

நீங்களாவது பரவாயில்லை கவி சாதாரணமா திட்டிருக்கிங்க.என் வீட்டுக்காரார் ரொம்ப திட்டுவார் எனக்கு ஒரே சிரிப்பாயிருக்கும்.ப்ரான்ஸ்லருந்து இந்தியாவுக்கு போகும்போதும்,அங்கிருந்து இங்கு வரும்போது அய்யோ இவங்க பண்ற அலப்பரை இருக்கே..வார்த்தையால் சொல்லமுடியாது.இந்த தடவை இந்தியாவிலிருந்து பிரான்ஸ் வரும்போது என் பொண்ணுக்கு விசா இல்லைஅது இல்லைன்னு ஒரே லொள்ளு.இத்தனைக்கும் என் பொண்ணுக்கு 6 மாத விசா எடுத்திருந்தோம்.பெரிய தலைவலியாடுச்சு...

கவி மலையாளம் பேசுவிங்களா?

kavisiva சொன்னது…

அவங்களுக்கும் வெளிநாடு போக முடியலியேங்கற வயித்தெரிச்சல் மேனகா! அதனாலதான் நாம போகும் போது நம்மை வெறுப்பேத்தறாங்க! சொந்த பந்தங்களை விட்டு தூரத்தில் கிடக்கும் நமக்குத்தானே இந்த வாழ்க்கையின் வலிகள் தெரியும் :-(. பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லேன்னா கூட உடனே ஓடிப்போக முடியாது. இதெல்லாம் அவங்களுக்கு எங்க தெரியப் போகுது.

அப்புறம் மலையாளம் பேசுவேன் மேனகா! எங்கள் மாவட்டம் கேரள எல்லையில்தானே இருக்கு. மலையாள சேனல்கள் பார்த்து கத்துக்கிட்டேன்.

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)