கல்லூரியில் சேரும் வரை வேலன்டைன் டே அப்படீன்னு ஒன்னு இருக்கறதே எனக்கு தெரியாது :-(. அம்புட்டு பொது அறிவு நமக்கு :-). முதலாம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிதான் அடுத்த நாள் வேலன்டைன் டே என்ற பேச்சு கல்லூரி முழுக்க எல்லாரும் பேசிக்கிட்டாங்க . என் வகுப்புத்தோழியிடம் அப்பாவியாக வேலன்டைன் டேன்னா என்னான்னு கேட்டேன். அடிப்பாவி இது கூடவா தெரியாதுன்னு அற்பமா ஒரு பார்வை பார்த்தா பாருங்க... ஒரு புழுவைப்போல் நெளிய வச்சுட்டா. அப்புறம் சொன்னா நாளைக்கு லவ்வர்ஸ் டே அதைத்தான் அப்படி சொல்றாங்க அப்படீன்னா. அப்படியா அப்படீன்னா நாளைக்கு நமக்கு வேலையில்லன்னு போயிட்டேன்.
அதுக்கப்புறம் லவ்வர்ஸ் டே பற்றி வித விதமான செய்திகள்(வதந்திகள்) உலா வந்தன. பேனா பரிசாக கொடுத்தா காதலன் பிரிஞ்சு போயிடுவான். கர்ச்சீஃப் கொடுத்தா காதலி உன்னை கைகழுவிட்டு கர்ச்சீஃப்ல கை துடைச்சுக்குவா. மஞ்சள் ரோஸ் தலையில் வச்சுக்கிட்டா இன்னும் ஃப்ரீயாத்தான் இருக்கேன். ரெட் ரோஸ் வச்சுக்கிட்டா ஏற்கெனவே ஆள் இருக்கு. வெள்ளை ரோஸ் வச்சுக்கிட்டா காதல் முறிஞ்சு போயிடுச்சு அப்பட்டீன்னு அர்த்தம்ம்னு ஒவ்வொன்னுக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டு ஒரு கூட்டம் அலைஞ்சுது அப்புறம் ஒவ்வொரு கலர் ட்ரெஸுக்கும் ஒவ்வொரு அர்த்தம்னு சொல்லி அடுத்த நாள் என்ன கலர் ட்ரெஸ் போடறதுன்னு மண்டையை சொறிய வச்சிட்டு ஒரு கூட்டம் சுத்திக்கிட்டு திரிஞ்சுது. இதையெல்லாம் கேட்டு எங்கள் ஐவர் அணி தோழிகள் பட்டாளத்துக்கு ஒரே குழப்பம். ஏன்னா எங்களில் யாருக்கும் அதுவரை காதலும் இல்லை. இனிமேல் கல்லூரியில் யாரையும் காதலிக்கும் எண்ணமும் இல்லை.
எந்த கலரில் ட்ரெஸ் போட்டாலும் அதுக்கு வில்லங்கமான அர்த்தம் இருக்குன்னு வேற ஒரு கூட்டம் திரிஞ்சுக்கிட்டு இருந்ததா... நாங்களெல்லாம் கூட்டம் போட்டு ஏகமனதாக ஒரு முடிவு செய்தோம். கறுப்பு கலர் சுடிதார் போட்டு சிவப்பு நிற ரோஜாவை தலையில் வைத்து செல்வதென முடிவு செய்தோம். அதாவது பசங்களை குழப்பறதா எங்களுக்கு நினைப்பு. என்ன பண்றது எப்பவுமே நெனப்புதானே பொழப்ப கெடுக்கறது
சரி சுடிதார் பிரச்சினை இல்லை. கறுப்பு நிற சுடிதார் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் சிவப்பு நிற ரோஸ் வேண்டுமே! சிவப்பு ரோஜா கிடைப்பது அன்று குதிரை கொம்பாக இருந்தது. இந்த பசங்க மொத்தமா எல்லாத்தையும் வாங்கிட்டானுங்கன்னு எங்க காலேஜ் பக்கம் பூக்கடை வச்சிருக்கற அக்கா கையை விரிச்சுட்டாங்க :-). ஒரு ரோஜாக்கு 20ரூபாய் கொடுப்பதாக இருந்தால் அடுத்த நாள் காலை கொண்டு வந்து தருவதாக சொல்லி எங்கக்கிட்ட அக்கா நால்லாவே வியாபாரம் செய்துட்டாங்க. பின்னே பிசினஸ் மேனேஜ்மென்ட் கோர்ஸ் இருக்கும் கல்லூரியின் வாசலில் கடை வச்சிருக்கற அக்காவுக்கு இந்த வியாபார தந்திரம் கூடவா தெரியாது.
லவ்வர்ஸ் டேயும் விடிந்தது. வீட்டிலிருந்து கறுப்பு சுடிதார் போட்டுக்கிட்டு போய் கல்லூரிப் பேருந்தில் ஏறினால் முக்கால் வாசி புள்ளைகளும் மஞ்சள் சுடிதாரும் முக்கால் வாசி பசங்களும் மஞ்சள் ஷர்ட்டும் போட்டுக்கிட்டு வந்திருந்தாங்க. ஏற்கெனவே ஜோடி சேர்ந்தவங்க மட்டும் சிவப்பு ட்ரெஸ் போட்டு சிவப்பு ரோசை தலையில் வைத்து பந்தா காட்டிக்கிட்டு நல்லா கடலை சாகுபடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. மஞ்சள் மங்கம்மாக்களும் மஞ்ச சட்டை ராமராஜன்களும் என்னை ஒரு பார்வை பார்த்தாங்க பாருங்க... அய்யோ இவ்வளவு சின்ன வயசுலயே காதல் தோல்வியா பாவம் புள்ளன்னு ஒரு பரிதாப பார்வை வீசிட்டு தனக்கேத்த ஜோடியை தேட ஆரம்பிச்சுட்டாங்க. மனதுக்குள் சிரித்துக் கொண்டு அப்பாவியாக சீட்டில் உட்காந்துகிட்டு யார் யாருக்கு நூல் விடறாங்கன்னு நோட் பண்ணிக்கிட்டு இருந்தேன் :-)
இப்படியாக அன்னிக்கு எல்லோரும் ஏதோ திருவிழாவிற்கு போவது போல் காலேஜ் போய் சேர்ந்தோம். பூக்கார அக்கா சொன்ன மாதிரியே சிவப்பு ரோஜா கொண்டு வந்து கொடுத்திட்டாங்க. ஜோரா தலையில் வச்சுக்கிட்டு க்ளாசுக்கு போயாச்சு.
மாணவமணிகள் இப்படி ஜாலி மூடில் காலேஜுக்கு வர ஆசிரிய மணிகள் எல்லாம் கொலை வெறியில் இருந்தார்கள். எந்த மாணவி தலையில் சிவப்பு ரோஜா இருந்தாலும் அவர்களை கொத்திவிடுவது போலவே முறைத்தார்கள். வேற ஒன்னும் இல்லை நாம படிக்கிற போது இதெல்லாம் இல்லியேங்கற வயித்தெரிச்சல்தான் எல்லாத்துக்கும் காரணம். ஆனால் எங்கள் டீமை பார்த்ததும் குழம்பிட்டாங்க! ஹேய் சக்சஸ்னு மனசுகுள்ளயே சொல்லிக்கிட்டு அப்பாவியா கிளாசுக்கு போயிட்டோம். எங்கள் மேத்ஸ் மேடம் க்கு மட்டும் என்ன தோனுச்சுன்னு தெரியலை எங்க அஞ்சு பேரையும் கூப்பிட்டு என்ன தலையில் ரெட் ரோஸ் கறுப்பு சுடிதார்னு கேட்டாங்க. எங்களுக்கோ அவங்களைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஏன்னா அவங்க கறுப்பு சேலை உடுத்தி தலையில் ஒரு சிவப்பு ரோஜா வச்சிருந்தாங்க :-). சும்மா பசங்களை குழப்பத்தான் இப்படீ அப்படீன்னு மேடத்துக்கிட்ட சொன்னதும் மேடம் சிரிச்சுட்டாங்க. எங்களில் இருந்த குறும்புக்கார தோழி மேடம் நீங்க ஏன் மேடம் கறுப்பு சேலை சிவப்பு ரோஜான்னு வந்திருக்கீங்க சார் மேல என்ன கோபம் அப்படீன்னு கேட்டா(மேம் க்கு அந்த வருடம்தான் திருமணம் ஆகியிருந்தது). அடிப்பாவிங்களா குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிறாதீங்கம்மா இப்படி காம்பினேஷனுக்கு ஏதோ அர்த்தம் இருக்கு போல இருக்கேன்னு உங்க ஐவர் அணியை பார்த்ததும்தான் தெரிஞ்சுது. நாம வேற அந்த காம்பினேஷன்ல வந்திருக்கோமே ஏதோ வில்லங்கமான அர்த்தமா இருக்குமோன்னு தெரிஞ்சுக்கதான் உங்களைக் கூப்பிடவே செய்தேன்னு சொல்லி சிரிச்சாங்க. அதுக்கப்புறம் மேம் மின் செல்லக்குழந்தைகளாகி விட்டோம். இப்படி காதலர் தினம் எங்களுக்கு ஆசிரியையின் அன்பைப் பெற்றுத் தந்தது.
காதலர் தினத்துக்கு மொக்கை போடாட்டி நமக்கு தூக்கம் வராதேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்போ நிம்மதியா இருக்கு இனிமே என்னவரோடு வேலன்டைன் சந்தோஷமா கொண்டாட போகலாம் :-)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
உங்களுக்கு கிடைத்த ஆசிரியையின் அன்பும்,ஐவர் கூட்டணியின் லூட்டியும்,உங்கள் எழுத்தின் ஜாலியும் ரசிக்கத்தக்கது.
நன்றி ஆசியா! நாங்கள் அடித்த லூட்டிகளை என்னால் வார்த்தையில் சரியாக கொண்டுவர முடியவில்லை. அவ்வளவு லூட்டி ஆனால் எல்லாம் எங்களுக்குளேயேதான். வெளியில் வந்தால் எங்களைப்போல் நல்ல பிள்ளைகள் கிடையாதுன்னு அப்பாவியா இருப்போம்
காலேஜ் வாழ்க்கையே தனிதான் கவி!! நாங்கள் நால்வர் இப்படிதான் நல்லா லூட்டி அடிப்போம் ஆனால் பார்த்தால் ஒன்னுமே தெரியாத பொண்ணு மாதிரி இருப்போம்.உங்களுடையது படித்ததும் மலரும் நினைவுகளயிடுச்சு..
மேனகா பல விஷயங்களில் நமக்குள் ஒற்றுமை பார்த்தீங்களா! எங்கள் க்ரூப்பின் பெயரெ ஃபைவ் ஃபிங்கர்ஸ். எங்க போனாலும் ஒன்னாத்தான் சுத்துவோம்.
இப்போ ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில். ஆனால் இன்றும் எல்லோருடனும் நல்ல தொடர்பு உள்ளது
இப்படி பழைய நினைவுகளை எழுதும்போது மனசுக்குள் சந்தோஷம். இதழோரம் ஒரு புன்னகை :-)
கவிசிவா, உங்கள் பழைய பதிவையே இன்னும் முழுசா படித்துச் சிரிக்கவில்லை, அதுக்குள் நிறையப்பதிவுகள்... நல்ல நகைச்சுவையாக எழுதுகிறீங்கள்... தொடருங்கோ அப்பப்ப வருவேன் சிரித்ததும் பின்னூட்டமும் தருவேன்.
நன்றி அதிரா! நேரம் கிடைக்கும் போது தவறாம வாங்கோ!
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)