தங்கள் வரவு நல்வரவாகுக!



இனிய வணக்கங்கள்!!!







நடுக்கடலில் சூரிய அஸ்தமனம்

சூரிய உதயம் கண்டு அழகிய சிங்கப்பூரில் இறங்கி ஒருவாரம் தங்கி விசா வேலைகள் எல்லாம் முடித்து அடுத்த கட்ட பயணம் நாங்கள் இருக்கும் தீவை நோக்கி...

இந்த முறை எல்லாம் திட்டமிட்ட படியே நடந்தது. மாலை 6மணிக்கு ஃபெரி(ferry). இமிக்ரேஷன் எல்லாம் முடித்து ஃபெரியிலும் ஏறி உட்கார்ந்தாச்சு. குமரியில் அந்த குட்டிப்படகில் விவேகானந்தர் பாறைக்கு சென்றது மற்றும் உவரியில் என் தோழியின் குடும்பத்தோடு மீன்பிடிப் படகில் போட்டிங் சென்றதைத்தவிர கடலில் பயணம் செய்தது இல்லை. அந்தப்படகுகளை விட இது பெரிதாக வசதியாக இருந்தது. ஏதோ பஸ்ஸுக்குள் இருக்கும் உணர்வுதான். ஆனால் லேசாக ஆடிக்கொண்டே இருந்தது. இங்கேயும் ஓடிப்போய் ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டேன் :-).

ஸ்டார் விர்கோ கப்பல். ஃபுல் வியூ எடுக்க முடியவில்லை :-(


செந்தோசா தீவுக்கு செல்லும் கேபிள் கார்


செந்தோசா தீவு


பால் நுரை தள்ளிக்கொண்டு ஃபெரி இலக்கை நோக்கி...


தூரத்தில் விடை கொடுக்கும் சிங்கப்பூர்


மெதுவாக ஃபெரி கிளம்பியது. வழியில் செந்தோசா தீவுக்கான கேபிள்கார் செந்தோசா தீவு, கடலோரத்தில் இருந்த வானுயர்ந்த கட்டிடங்கள் என்று பட்டிக்காட்டான் பட்டணம் பார்த்த கதையாக எல்லாவற்றையும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். கப்பலை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நான் 13மாடிகள் கொண்ட பெரிய ஸ்டார் விர்கோ கப்பலைப்பார்த்து திறந்த வாயை மூட சில நிமிடங்களானது. ரோட்டிலே செல்லும் போது வித விதமான கார்களைப் பார்ப்பது போல் கடலில் சென்றுகொண்டிருக்கும் வித விதமான கப்பல்களைக் காணமுடிந்தது. மிகப்பெரிய கட்டுமரம் போல இருந்தகப்பலில் மணலை நிரப்பி அதை இன்னொரு ஃபெரி இழுத்துக் கொண்டு போனது. எல்லாவற்றையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே போன போது மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கியது.


ஆரஞ்சு வண்ணப் பெண் கடல் குளியலுக்கு தயாராக...


வெட்கத்தில் தீவின் பின்னே முகம் மறைத்து...



மீண்டும் தீவின் பின்னிருந்து மேகக்கூட்டங்களிடையே முகம் காட்டி சிரிக்கிறாள்


தூரத்தில் ஆரஞ்சு வண்ணப்பந்து ஒன்று கடலுக்குள் மெல்ல மெல்ல இறங்கி குளிக்கத் தொடங்கியிருந்தது. கடலில் பயணித்துக் கொண்டே அந்த சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க கொள்ளை அழகு. அதிலும் இடையிடயே ஏதேனும் தீவின் பின்னால் தன் முகம் மறைத்து மீண்டும் தன் பாதி முகம் காண்பித்து சிரிக்கும் ஆதவன் அழகோ அழகு.



இப்போதெல்லாம் முன்பு என்னை ஆச்சரியப்பட வைத்த மற்ற காட்சிகள் சலித்துப் போய் விட்டது. ஆனால் எத்தனை முறை கண்டாலும் மீண்டும் மீண்டும் காணவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காகவே எப்போது சிங்கை வந்தாலும் மாலை 6மணி ஃபெரியில்தான் எங்கள் ஊர் திரும்புவேன். ஆனாலும் சில நேரங்களில் மேகதேவன் என் ஆசையில் மேகத்தை அள்ளிப் தெளித்து விடுவார்

2 கருத்துகள்:

prabhadamu சொன்னது…

ஹாய் கவிசிவா நலமா? என்னாடா சொந்தோஷா தீவு வருதோன்னு பார்த்தேன். வாழ்த்துக்கள்ப்பா. சூப்பர். கலக்குங்க.

kavisiva சொன்னது…

ஹாய் பிரபா எப்படி இருக்கீங்க? நான் நலமே!
நன்றி பிரபா!

அந்த படங்கள் சில வருடங்களுக்கு முன் எடுத்தது. இப்போ செந்தோசா ரொம்ப மாறிடுச்சு :-(. அடுத்த முறை போகும் போது மேலும் படங்கள் எடுத்து சேர்க்கணும்

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் என்னும் முத்துகளை கொஞ்சம் கொடுத்துவிட்டு செல்லுங்களேன். மகிழ்வேன் :-)